ரஜினிகாந்தின் 169-வது படம் என்ன கதை?
ஜெயிலர் என்ற தலைப்பிற்கு ஏற்ப இந்த கதைக்களம் ஜெயில் சார்ந்து தான் அமையும் என முதலிலேயே கணிக்கப்பட்டது. ஒரு ஜெயில் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை என்கிறார்கள்.
'அண்ணாத்த' படத்தை அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 169-வது படம். இந்தப் படத்துக்கு 'ஜெயிலர்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ரஜினிகாந்த் ஏற்கனவே 'எந்திரன்' 'அண்ணாத்த' ஆகிய 2 படங்களில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்தார். மூன்றாவதாக அவர் அந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்.
தற்போழுது ஜெயிலர் படத்தின் கதைக்களம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகிறது,அதன் படி ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை தகர்க்க பிளான் போடுகிறது. அந்த சிறையில் தலைமை ஜெயிலராக பணியாற்றும் ரஜினிகாந்த் அந்த பிளானை எப்படி தடுத்து , சிறையை காப்பாற்றுகிறார் மேலும் அந்த கேங்ஸ்டர் கும்பலை எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை ஆகும் .
இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜூலை) தொடங்க இருக்கிறது.
ஒரு ஜெயில் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை என்கிறார்கள். இதில் ரஜினிகாந்தின் இளம் வயது சம்பவங்கள் 'பிளாஷ்பேக்' கில் காட்டப்படுகின்றன. இளம் வயது ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.