'விழி எதிரில் தேயும்...' - குஷி படத்தின் புதிய பாடல் வெளியானது
'குஷி' திரைப்படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் 'குஷி' படத்தின் சில பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'விழி எதிரில் தேயும்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை ஹரிசரண் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story