12 வருட வளர்ச்சியை நினைவு கூர்ந்த விக்னேஷ் சிவன்


12 வருட வளர்ச்சியை நினைவு கூர்ந்த விக்னேஷ் சிவன்
x

முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்டிற்கு மீண்டும் செல்வது 'உணர்ச்சிபூர்வமாகவும் திருப்திகரமாகவும் இருக்கிறது' என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

தற்போது ஹாங் காங் சுற்றுலா சென்றுள்ளவர்கள் அங்குள்ள டிஸ்னிலேண்ட் ரிசார்ட் முன்பு குழந்தைகளை ஏந்தியபடியும் டிஸ்னி கோட்டைக்கு முன்பு ஒன்றாக நிற்பது போலவும் எடுத்த படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "12 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் செருப்பு அணிந்து கையில் ஆயிரம் ரூபாய் பணத்தோடு போடா போடி படப்பிடிப்புக்கு அனுமதி பெற வந்துள்ளேன். தற்போது எனது அன்பு குழந்தைகள் குடும்பத்தோடு அதே இடத்தில் சந்தோசமாகவும் உணர்ச்சிமயமாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.


Next Story