'வாழை' திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!


வாழை திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!
x

வாழை படத்தை பார்த்த வி.சி.க கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாரி செல்வராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

சென்னை,

திரையுலகின் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் 'வாழை' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டி நெகிழ்ந்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. மக்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 23ம் தேதி வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

வாழை படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியுள்ளார். குடும்பத்தார் மற்றும் படத்தில் சிறுவர்களாக நடித்த இருவருக்கும் திருமாவளவன் சால்வை அணிவித்து பாராட்டினார். அத்துடன் மாரி செல்வராஜின் இல்லத்திலேயே அவர்களின் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழை இலையில் உணவும் உண்டார்.

வாழை திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளது. படம் வெளியாகிய இரண்டு நாட்களில் வாழை 3 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜின் வாழை காண்போரின் நெஞ்சங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. படத்திற்கு கிடைக்கும் மக்களின் பேராதரவை பார்க்கும் போது படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்க்கபார்க்கப்படுகிறது.

1 More update

Next Story