மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது


மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
x

'வாழை' திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ஒத்த சட்டி சோறு' என்ற பாடல் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் மற்றும் ஆதித்யா ரவிந்திரன் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வாழை' திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Next Story