'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் - படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு


லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் - படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 10:07 AM IST (Updated: 18 Oct 2023 10:07 AM IST)
t-max-icont-min-icon

'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகாலை 4 மணிக்கு படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி தரமறுத்துவிட்டது. இதனையடுத்து காலை 7 மணிக்கு திரையிட அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதியளித்த படி காலை 9 மணிக்கே திரையிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டதால், இனிமேல் காட்சிகளை மாற்றுவது சிரமம் என திரையரங்க உரியமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story