அருள்நிதி நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
அருள்நிதி நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் அருள்நிதி தற்போது 'ராட்சசி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சை கவுதமராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'கழுவேத்தி மூர்க்கன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.