கதாநாயகனான டைரக்டர்


கதாநாயகனான டைரக்டர்
x

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ என்ற புதிய படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.

டைரக்டர்கள் பலர் ஏற்கனவே கதாநாயகர்களாக மாறி உள்ளனர். அந்த வரிசையில் டைரக்டர் பிரதீப் ரங்கநாதனும் 'லவ் டுடே' என்ற படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இவர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கி பிரபலமானவர். நடிகரானது குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, ''நான் குறும்படங்கள் இயக்கி சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்திலேயே எனக்கு நடிப்பின் மீதுதான் ஆர்வம் இருந்தது. குறும்படங்களிலும் நானே நடித்து இருக்கிறேன். புதுமுக நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் அமைவது கஷ்டம் என்பதால் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை டைரக்டு செய்து வெளியிட்டேன். அந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. 6 வருடங்களுக்கு முன்பு எனது நடிப்பில் வெளியான குறும்படத்தை இப்போது லவ் டுடே என்ற பெயரில் இயக்கி கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். செல்போன்கள் மாறுவதால் ஏற்படும் பிரச்சினைகளையும், தீர்வையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பேன்" என்றார்.


Next Story