இணையத்தில் வைரலாகும் 'நான் ஈ' பட நடிகரின் 'மேக்ஸ்' பட டீசர்


'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கிச்சா சுதீப் கவர்ந்தார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, இவரது நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' உருவாகிவருகிறது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸின் கீழ் எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கிச்சா சுதீப், அனுப் பண்டாரி இயக்கும், 'பில்லா ரங்கா பாஷா' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story