'தளபதி 67' படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு


தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு
x

'தளபதி 67' படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

'வாரிசு' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இந்த படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது 'தளபதி 67' படக்குழு.

'தளபதி 67' படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டது. அந்தவகையில், தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி( நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'தளபதி 67' படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பூஜையில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.


Next Story