'டைரக்டர் என்னிடம் அழுது காட்ட சொன்னார்' - காஜல் அகர்வால்


டைரக்டர் என்னிடம் அழுது காட்ட சொன்னார் - காஜல் அகர்வால்
x

தனது முதல் பட அனுபவம் குறித்து காஜல் அகர்வால் கூறினார்.

சென்னை,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான 'லட்சுமி கல்யாணம்' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த நிலையில் தனது முதல் பட அனுபவம் குறித்து காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "என்னை முதலில் தெலுங்கில் தேஜா இயக்கிய லட்சுமி கல்யாணம் படத்துக்காக நடிகை தேர்வுக்கு அழைத்தனர்.

எனக்கு தெலுங்கு தெரியாது. வசனம் பேச சொல்வார்களா? என்ன மாதிரி நடிக்க சொல்வார்கள் என்றெல்லாம் யோசித்து பதற்றத்தோடு உட்கார்ந்து இருந்தேன். என்னோடு எனது அப்பா வந்து இருந்தார்.

அப்போது டைரக்டர் என்னிடம் ஒருமுறை அழுது காட்டுங்கள் என்று சொன்னார். பீலிங்கே இல்லாமல் எப்படி அழுவது என்று யோசித்தேன். அப்போது எனது தந்தை வந்து எப்போதும் நான் அழும் ஒரு விஷயத்தை சொன்னார். அவ்வளவுதான். ஓ வென்று கதறி அழுது விட்டேன். நீ ரொம்ப அழகாக அழுதாய் என்று இயக்குனர் தேஜா என்னிடம் சொல்லி முதல் படமான லட்சுமி கல்யாணம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்'' என்றார்.

தற்போது நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் 'சத்யபாமா' என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது.


Next Story