நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த்
மருத்துவமனையில் இருந்தபோது உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து முதுநிலை டாக்டர்கள் குழுவினர், ரத்த நாளத்தில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' பொருத்தினர். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேறியதை தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்கானித்து வந்தது.இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று குணடைந்து வீடு திரும்பினார் . இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்தபோது உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
நான் மருத்துவமனையில் இருக்கும் போது சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும். எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும். அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்