ஹாலிவுட் சீரிஸில் நடிகை தபு

image courtecy:instagram@tabutiful
நடிகை தபு, ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை தபு. இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித்துக்கு ஜோடியாக 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் சில படங்களே நடித்தாலும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.
மேலும், இவர் இந்தி சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர் சமீபத்தில் க்ரூ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இதில் கரீனா கபூர், கிருதி சனோன் உள்ளிட்டோரும் நடித்தனர். இவர் 52 வயதிலும் இளமையாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை தபு, ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த டூன் திரைப்படத்தில் பிரீகுவலாக உருவாகி வரும் ஹாலிவுட் சீரிஸ் டூன்: புரோபகி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார்.