தலித் சமூகம் பற்றி அவதூறு: கன்னட நடிகர் உபேந்திரா மன்னிப்பு கோரினார்


தலித் சமூகம் பற்றி அவதூறு: கன்னட நடிகர் உபேந்திரா மன்னிப்பு கோரினார்
x
தினத்தந்தி 14 Aug 2023 2:31 AM IST (Updated: 14 Aug 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் நடிகர் உபேந்திரா பேசியதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. உத்தம பிரஜாகிய கட்சியின் நிறுவனரான இவர் தனது கட்சி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் நேரலையில் பேசினார். அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக பேசினார். அப்போது தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு எதிராக தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக பெங்களூரு சி.கே.அச்சுகட்டு போலீசில் நடிகர் உபேந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் உபேந்திரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நடிகர் உபேந்திரா, சமூக வலைதள பக்கத்தில் இருந்து நேரலை வீடியோவை நீக்கி உள்ளார். மேலும் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.


Next Story