சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரிதா, சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது 'மாவீரன்' திரைப்படத்தின் ரிலீஸ்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.



Next Story