பூஜா ஹெக்டேவின் 'தேவா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!


பூஜா ஹெக்டேவின் தேவா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
x

பூஜா ஹெக்டேவின் ‘தேவா’ படம் 2025-ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தார்.

தற்போது ஆக்சன் திரில்லர் படமான 'தேவா' படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தினை 'சல்யூட்' மற்றும் 'காயம்குளம் கொச்சுன்னி' போன்ற மலையாள படங்களை தயாரித்த ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை சித்தார்த் ராய் கபூரின் ராய் கபூர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.


ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் 'தேவா' படம் 2025-ம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷாகித் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரில்லர் படமாக உருவாகும் இதில் ஷாகித் கபூர் காவல்துறை அதிகாரியாகவும் பூஜா ஹெக்டே பத்திரிகையாளராகவும் நடித்துள்ளார்கள்.

இதை தவிர பூஜா ஹெக்டே, நடிகர் சூர்யாவின் 44-வது படத்திலும், நதியத்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் "சங்கி" படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story