'நயன்தாராவை அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கக்கூடாது'- 'குபேரா' பட இயக்குனர்


Sekhar Kammula says featuring Nayanthara in Anaamika a wrong choice!
x

சேகர் கம்முலா இயக்கத்தில் 'நீ எங்கே என் அன்பே' படம் வெளியானது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. இவர் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் 'நீ எங்கே என் அன்பே'(அனாமிகா). இதுதான் அவர் தமிழில் இயக்கிய முதல் படமாகும். இதில், நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் உள்ளிட்டோர் நடித்தனர்.

நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். எனினும் இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்து சேகர் கம்முலா கூறுகையில்,

'அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். பின்னர், பெண்களை மையமாக கொண்ட படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பியதால் இதனை இயக்கினேன்.

அந்த நேரத்தில் தனக்கு நல்ல கதை இல்லாததால், பாலிவுட் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தேன். இதனால், இப்படத்தில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகை நடித்தால் நல்ல வரவேற்பை பெறும் என நம்பினேன். ஆனால் இப்படம் சரியாக அமையவில்லை. இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்திருக்கக்கூடாது. அவரை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு, என்றார்.

இந்த படம், இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'கஹானி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சேகர் கம்முலா, தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார்.


Next Story