சசிகுமார் நடித்த 'நந்தன்' படத்தின் அப்டேட்


சசிகுமார் நடித்த   நந்தன் படத்தின் அப்டேட்
x

சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் குறித்த அறிவிப்பை நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 'அயோத்தி' வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

'உடன்பிறப்பே' படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த பின்பும் நீண்ட நாள்களாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.

கருடன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்த படங்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை குறித்து மிகப்பெரிய அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். தற்போது, இத்திரைப்படம் தொடர்பான அறிவிப்பை சசிகுமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


Next Story