ஜப்பானில் வசூல் குவிக்கும் 'ஆர்ஆர்ஆர்'


ஜப்பானில் வசூல் குவிக்கும் ஆர்ஆர்ஆர்
x

ஜப்பானில் ‘ஆர்ஆர்ஆர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியான முதல் நாளிலேயே ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்தது.

ராஜமவுலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண் ஆகியோர் நடித்து இருந்தனர். விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய கதையம்சத்தில் வந்தது. ஜப்பானில் இந்திய படங்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. ரஜினிகாந்த் படங்களை அங்குள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் இந்திய படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு பணம் பார்க்கின்றனர்.

'ஆர்ஆர்ஆர்' படத்தையும் ஜப்பான் மொழியில் வெளியிட்டனர். இந்த படம் இதுவரை எந்த இந்திய படமும் நிகழ்த்தாத வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' கடந்த வெள்ளிக்கிழமை வெளியான முதல் நாளிலேயே ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்தது. மூன்று நாட்களில் வசூல் ரூ.3 கோடியை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story