200 ஆண்டுகள் நினைவு முதல் முத்திரை! நடிகர் ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம்


200 ஆண்டுகள் நினைவு முதல் முத்திரை! நடிகர் ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம்
x

இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வது ஆண்டை குறிப்பிடும் வகையில் வெளியாகியுள்ள முதல் நினைவு முத்திரையை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் ரஜினிகாந்திற்கு லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனால், தமிழ்நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களை குறிப்பிடும் வகையில் இலங்கையின் பெருந்தோட்ட சமூகம் உள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை சென்று 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலைக் காடுகளில் உழைத்து வரும் தமிழர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாகும்.

சுவைக்குப் பெயர் பெற்ற சிலோன் டீ உருவாக்கி வருவதிலும் இவர்கள் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் பெருந்தோட்ட சமூகம். இதன் 200வது ஆண்டை கொண்டாடும் வகையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதல் நினைவு முத்திரையை நடிகர் ரஜினிகாந்திடம் அந்த அமைப்பிற்கான நிர்வாகி நேரில் சந்தித்து வழங்கினார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story