'ரஜினி சார் பாவம்...ரொம்ப கஷ்டமா இருக்கு' - மன்சூர் அலிகான் பேச்சு


ரஜினி சார் பாவம்...ரொம்ப கஷ்டமா இருக்கு - மன்சூர் அலிகான் பேச்சு
x

சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும் என்று மன்சூர் அலிகான் கூறினார்.

சென்னை:

ஏ.எல்.ராஜா இயக்கத்தில் டி.டி.சினிமா ஸ்டுடியோ பட நிறுவனம் தயாரித்துள்ள படம் சூரியனும் சூரியகாந்தியும். இப்படத்தில், ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மன்சூர் அலிகான் பேசுகையில்,

"ரஜினி சாருக்கு இப்போது 70, 80 வயது ஆகிவிட்டது. இதனால் அவருக்கு ஹீரோயின் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவருக்கு மூத்த நடிகைகள்தான் ஜோடியாக முடியும். உதாரணமாக ஐஸ்வர்யா ராயை கூறலாம்.

அவர்களை நடிக்க வைத்தாக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். கோடிக்கணக்கில் கொட்டி அவர்களை தேடித்தான் செல்கிறார்கள். இப்படியே போகும் பட்சத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும். சின்ன பட்ஜெட் படம் என்று நினைக்காமல் உள்ளே இருக்கும் கதையை பாருங்கள்" என்றார்.


Next Story