'புஷ்பா 2' - இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியீடு


Pushpa 2 - Update release on the second song
x

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத்தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகின.

இந்நிலையில், 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு உள்ளது. அதில், நடிகை ராஷ்மிகா இடம்பெறும் இரண்டாவது பாடலின் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story