பிரசாந்தின் 'அந்தகன்' பட ரிலீஸ் அப்டேட்


பிரசாந்தின் அந்தகன் பட ரிலீஸ் அப்டேட்
x

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை,

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

'அந்தகன்' படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.


Next Story