பாடகி சித்ராவுக்கு பழசி ராஜா விருது
சின்னக்குயில் சித்ராவுக்கு கேரளாவில் இந்த ஆண்டுக்கான பழசி ராஜா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் அதிக பாடல்கள் பாடி உள்ளார். ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும், மத்திய அரசின் பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் பாடகி சித்ராவுக்கு கேரளாவில் இந்த ஆண்டுக்கான பழசி ராஜா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 16-ந் தேதி கோழிக்கோடு தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பிரபல மலையாள டைரக்டர் எம்.டி.வாசுதேவன் நாயர் இந்த விருதை வழங்குகிறார். பாடகி சித்ரா தலைமுறைகள் கடந்தும் இனிமையான பாடல்களை பாடியதற்காக பழசி ராஜா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று விருது கமிட்டி அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story