விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்
![விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புதிய அப்டேட் விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புதிய அப்டேட்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/25/1618522-untitled-14.webp)
'ரத்னம்' படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் 3-வது முறையாக விஷால் இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து உள்ளார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'ரத்னம்' படத்தில் இடம் பெற்றுள்ள சிங்கிள் ஷாட் காட்சியின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. 'ரத்னம்' திரைப்படம் நாளை (ஏப்ரல் 26) திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.