'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு


காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு
x

ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகிறது.

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருத்திகா உதயநிதி. கோலிவுட்டில் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். கலகலப்பாக நகைச்சுவை பாணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் தான் 'காதலிக்க நேரமில்லை'.

இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலிருந்து முதல் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story