தூத்துக்குடியில் களமிறங்கிய மாரி செல்வராஜ்
புளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி வருகிறார்.
புளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம். சேதம் அதிகமாக உள்ளது. சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியவில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story