"மிளக தட்டி முட்டி.. அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து" - வைரலாகும் 'லியோ' போஸ்டர்..!


மிளக தட்டி முட்டி.. அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து - வைரலாகும் லியோ போஸ்டர்..!
x

விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு போஸ்டர் விருந்து தரப்போவதாக 'லியோ' படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் "மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போஸ்டரில், "அமைதியாக இருங்கள்; போருக்கு தயாராகுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story