'லப்பர் பந்து' படத்தின் 'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல் வெளியானது


ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படத்தின் ‘சில்லாஞ்சிருக்கியே’ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் 'டம்மா கோலி' பாடல் வெளியானது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கானா சேட்டு பாடியுள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனா இருவருக்கும் இடையே உள்ள உறவையும் காதலையும் காட்சிப்படுத்தி மிக அழகாக அமைந்துள்ளது. இப்பாடலை பிரதீப் குமார் மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ளனர்.

'லப்பர் பந்து' படம் வரும் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.


Next Story