அரசியலுக்கு வருகிறேனா? 'ஆதிபுருஷ்' பட நடிகை விளக்கம்


அரசியலுக்கு வருகிறேனா? ஆதிபுருஷ் பட நடிகை விளக்கம்
x

என்றாவது ஒருநாள் அரசியல் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றினால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை கீர்த்தி சனோன் கூறினார்.

பா.ஜ.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்த நடிகை கங்கனா ரணாவத், இந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேசத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

கங்கனாவை தொடர்ந்து கீர்த்தி சனோனும் அரசியலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் கீர்த்தி சனோன் குறித்து பல்வேறு விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அரசியலுக்கு வருகிறேனா? என்பது குறித்து கீர்த்தி சனோன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "எந்த ஒரு விஷயம் செய்வதற்கும் ஆர்வம் தேவை. அது நம் மனதின் உள்ளே இருந்து வர வேண்டும்.

அந்த ஆர்வம் எனக்கு உள்ளிருந்து வரும் வரையிலும், நான் இதைச் செய்வேன் அல்லது அதைச் செய்வேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசியல் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றினால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஆதிபுருஷ்', 'க்ரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் கீர்த்தி சனோன், 2021-ம் ஆண்டில் வெளியான 'மிமி' படத்துக்கு தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சனோன், ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாரான 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை வேடத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார்.


Next Story