நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு துவக்கம்!


நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு துவக்கம்!
x

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். டாக்ஸிக் படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு கர்நாடகா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று பெங்களூருவில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இப்படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இயக்குநர் கீது மோகன்தாஸ் லையர்ஸ் டைஸ், மூத்தோன் படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது மோகன்தாஸ் , தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story