கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் மம்முட்டி; நடிகை வின்சி அலோசியஸ்
சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்முட்டி பெற்றார். 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் ஜேம்சாக மிகச் சிறந்த நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் 53வது மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பெங்காலி திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் கோஷ் தலைமையிலான இறுதி நடுவர் குழுவால் விருதுகள் முடிவு செய்யப்பட்டன.
பட்டியலிடப்பட்ட மொத்த 154 படங்களில் 30 படங்கள் இறுதிப் போட்டியை எட்டின.
விருதுகளைக் கேரளா மந்திரி சஜி செரியன் திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்முட்டி பெற்றார். 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் ஜேம்சாக மிகச் சிறந்த நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றார். மம்முட்டி சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை வெல்வது இது எட்டாவது முறையாகும்.
ரேகா படத்தில் நடித்ததற்காக வின்சி அலோசியஸ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
அரியிப்பு படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.
நான் தான் கேஸ் கொடு படத்தில் நடித்ததற்காக குஞ்சாகோ போபன் மற்றும் அப்பன் படத்தில் நடித்த அலென்சியர் ஆகியோர் சிறப்பு ஜூரி விருது பெற்றனர்.
சிறந்த படமாக நண்பகல் நேரத்து மயக்கம் தேர்வு செய்யப்பட்டது.
மற்ற விருதுகள்
சிறந்த புத்தகம்: சினிமாவின் கற்பனை நிலங்கள் (சி.எஸ். வெங்கடேஸ்வரன்)
சிறந்த கட்டுரை: மறுசீரமைப்பின் நவேந்திரகாலம் (சாபு பிரவ்தவுஸ்)
பெண், திருநங்கை விருது: ஸ்ருதி சரண்யம் (படம்: பி32 முதல் 44 வரை)
குழந்தைகளுக்கான படம்: பல்லொட்டி: தொண்ணூறு கிட்ஸ். சாஜித் யாஹியா தயாரித்து, ஜிதின் ராஜ் இயக்கியுள்ளார்
அறிமுக இயக்குனர்: ஷாஹி கபீர், படம்: இளவீழ்பூஞ்சிரா
நடனம்: ஷோபி பால் ராஜ் (தல்லுமாலா)
டப்பிங் கலைஞர் (பெண்): பாலி வில்சன் (சவுதி வெள்ளக்கா)
டப்பிங் கலைஞர் (ஆண்): ஷோபி திலகன் (19 ஆம் நூற்றாண்டு)
ஆடை வடிவமைப்பு: மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் (சவுதி வெள்ளக்கா)
சிறந்த ஒப்பனை: ரோனாக்ஸ் சேவியர் (பீஷ்ம பர்வம்)
ஒலி கலவை: விபின் நாயர் (நான் தான் கேஸ் கொடு )
கலை இயக்கம்: ஜோதிஷ் சங்கர் (நான் தான் கேஸ் கொடு )
எடிட்டிங்: நிஷாத் யூசுப் (தல்லுமாலா)
பின்னணிப் பாடகி: மிருதுளா வாரியர் (மயில்பீலி இலக்குன்னு கண்ணா, 19ஆம் நூற்றாண்டு)
பின்னணி பாடகர்: கபில் கபிலன் (கண்ணவே, பல்லொட்டி 90'ஸ் கிட்ஸ்)
பின்னணி இசை: டான் வின்சென்ட் (நான் தான் கேஸ் கொடு )
சிறந்த இசை இயக்கம்: எம் ஜெயச்சந்திரன் (19 ஆம் நூற்றாண்டு, ஆயிஷா)
சிறந்த பாடலாசிரியர்: ரபீக் அகமது (அலை நீயே.., மாஷ் ஆப் பூல்ஸ்)
சிறந்த திரைக்கதை: ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் (நான் தான் கேஸ் கொடு )
சிறந்த ஒளிப்பதிவு: மனேஷ் மாதவன் (இளவீழபூஞ்சிரா),
சந்துரு செல்வராஜ் (சண்டை)
சிறந்த கதையாசிரியர்: கமல் கே.எம் (பட)
சிறந்த குழந்தை நடிகை (பெண்): தன்மயா சோல் (சண்டை)
சிறந்த குழந்தை நடிகர் (ஆண்): மாஸ்டர் டாவின்சி (பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ்)
குணச்சித்திர நடிகை: தேவி வர்மா (சவுதி வெள்ளக்கா)
குணச்சித்திர நடிகர்: பிபி குன்ஹிகிருஷ்ணன் (நான் தான் கேஸ் கொடு )
இரண்டாவது சிறந்த படம்: அடிதட்டு (ஜிஜோ ஆண்டனி இயக்கம்)