கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து பங்கேற்ற விழா


கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து பங்கேற்ற விழா
x

புதுக்கோட்டை பழனியப்பா திரையரங்கத்திற்கு எம்.ஜி.ஆர். 3 முறை வந்திருக்கிறார். அதில் 2 நிகழ்ச்சிகள் அவரது திரைப்பட வெற்றி விழாக்கள். மற்றொன்று தி.மு.க. சார்பில் நடந்த கட்சி விழாவாகும். அதில் கருணாநிதியும் பங்கேற்றார்.

திரையரங்கத்தில் திரையின் முன்பு கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஒரே மேடையில் தோன்றி கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். அப்போது திரையரங்கத்தின் உரிமையாளர் பழனியப்பா செட்டியாரும் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மாலைகள் அணிவித்து கவுரவித்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வானது கடந்த 1960-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நடந்துள்ளது. இந்த அரிய புகைப்படம் பழனியப்ப செட்டியாரின் பேரன் வழியான எஸ்.பி.பழனியப்பன் வீட்டில் அலங்கரித்து கொண்டிருக்கிறது. கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் இணைந்து புதுக்கோட்டையில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இது முக்கியவத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இருவரும் இணைந்து புதுக்கோட்டையில் பங்கேற்ற நிகழ்வு இது ஒன்றாகத்தான் இருக்கக்கூடும் எனவும் அறியப்படுகிறது.

இந்தப் புகைப்படத்தை அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் படம் பிடித்து சென்றிருக்கின்றனர். வரலாற்று வீடியோவில் இந்தப் புகைப்படமும் இடம்பெற்றுள்ளதாக எஸ்.பி.பழனியப்பன் கூறினார்.

1 More update

Next Story