'சர்தார் 2' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்


சர்தார் 2 படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
x

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 'சர்தார் 2' திரைப்படம் பூஜையுடன் துவங்கி உள்ளது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், ரத்ன குமார், நடிகர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இதன் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு, ஜூலை 15-ம் நாள் இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெறுமென தெரிவித்துள்ளது.


Next Story