நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன்...! காந்தாரா ஹீரோவின் சூசகம்...! வலுக்கும் எதிர்ப்பு!


நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன்...! காந்தாரா ஹீரோவின் சூசகம்...! வலுக்கும் எதிர்ப்பு!
x
தினத்தந்தி 26 Nov 2022 12:17 PM (Updated: 26 Nov 2022 12:20 PM)
t-max-icont-min-icon

நண்பர்களான ரக்‌ஷித் ஷெட்டியும், ரிஷப் ஷெட்டியும் பார்ட்னராக இருந்து தான் அந்த பரம்வா தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு

கன்னட திரையுலகத்தை சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இனிமேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்கப் போவதில்லை என்கிற நிலைக்கே வந்து விட்டதாக பரபரப்பு கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் பிற மொழி படங்களான வாரிசு, புஷ்பா 2 படங்களுக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப் போவதாக அதிரடி பேச்சுக்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில் காந்தாரா பட நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன் என்பதை மறைமுகமாக சொல்லி உள்ளது பேரதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நிலையில், சமீபத்தில் அதன் ஹீரோவும், டைரக்டருமான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் அடுத்து உங்கள் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் சாய் பல்லவி இவர்களில் யாரை புக் செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு உடனடியாக இவர்களில் யாரும் எனக்கு ஹீரோயினாக வேண்டாம் புதுமுக நடிகைகள் தான் என் கதைக்கு பொருத்தமாக இருப்பார்கள் என அதிரடியாக சொல்லி விட்டார்.

மேலும், தொடர்ந்து பேசிய ரிஷப் ஷெட்டி சமந்தா மற்றும் சாய் பல்லவி இருவருமே நேச்சுரலான நடிகைகள் என்று பாராட்டினார். சமந்தா உடல்நலம் சரியாகி சீக்கிரமே பழையபடி வர வேண்டும் என்று சொன்ன ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா பற்றி எதையுமே சொல்லவில்லை.

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அதைவிட 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் பெரும் வெற்றியைப் பெற்று ராஷ்மிகாவுக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, 2021 ல் புஷ்பா ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும், புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இதனிடையே தனது கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகாவின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அவர் திருமண முடிவில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். ராஷ்மிகாவின் இந்த அணுகுமுறையால் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் அவர் இந்தி, தமிழ் என தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை விட்டு வேறு மொழியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நண்பர்களான ரக்‌ஷித் ஷெட்டியும், ரிஷப் ஷெட்டியும் பார்ட்னராக இருந்து தான் அந்த பரம்வா தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story