ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 4' - வெளியான அப்டேட்


ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 - வெளியான அப்டேட்
x

‘காஞ்சனா 4’ படத்தை இயக்குவதில் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் பேமிலி ஆடியன்சை கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களுக்கான மவுசு குறையவில்லை என்பதை கடந்த மாதம் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தின் வெற்றி உறுதி செய்துள்ளது. சுந்தர்.சி நடித்து இயக்கியிருந்த இந்த படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்தது.

இந்த நிலையில் 'காஞ்சனா' சீரிஸ் திரைப்படங்களின் வரிசையில் 'காஞ்சனா 4' படத்தை இயக்குவதில் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் 'காஞ்சனா 4' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ராகவா லாரன்ஸ் 'பென்ஸ்', 'ஹன்டர்' ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story