காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'கோஸ்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வால் நடித்துள்ள 'கோஸ்டி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
'குலேபகாவலி, 'ஜாக்பாட்' ஆகிய படங்களின் இயக்குனர் கல்யாண், அடுத்ததாக காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'கோஸ்டி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் படம் வரும் மார்ச் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Get ready for the endless comedy, roller coaster ride #Ghosty releasing in theatres on March 17th.
Starring @iYogiBabu and me
A @samcsmusic Musical
@Kalyaandirector @Sudhans2017 @Jayaram_gj @seedpictures1 @ksravikumardir @editorvijay @jacobcamkid @DoneChannel1 pic.twitter.com/JVEyDOXmMb