சென்னையில் உள்ள பிரபல கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்

image courtecy:instagram@janhvikapoor
நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இவர் நடித்து முடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி திரைப்படம் வரும் 31 அன்று வெளியாகிறது. இதற்கான, புரொமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் , நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள பிரபல முப்பாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்தான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், முப்பாத்தம்மன் கோவிலுக்கு முதல் முறையாக வந்துள்ளேன். அம்மாவுக்கு சென்னையில் மிகவும் பிடித்த இடம் இது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.






