ஜெயிலர் 2-ம் பாகம் - மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா?


ஜெயிலர் 2-ம் பாகம் - மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா?
x

‘சந்திரமுகி’, ‘தர்பார்’ படங்களில் ரஜினியும், நயன்தாராவும் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா நட்சத்திரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் அதிரடி மாஸ் காட்சிகளால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.615 கோடிக்கு மேல் வசூலித்து 2023-ல் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் காணக் கிடைக்கிறது.

'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இருப்பதாக நெல்சன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'சந்திரமுகி', 'தர்பார்' படங்களில் ரஜினியும், நயன்தாராவும் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.


Next Story