நடிகையுடன், விஷாலுக்கு திருமணமா?

விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது
நடிகர் விஷால் 'துப்பறிவாளன்-2', 'மார்க் ஆண்டனி' படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் 'துப்பறிவாளன்-2' படத்தை விஷாலே இயக்கியும் வருகிறார்.
2014-ம் ஆண்டில் வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடித்தபோது விஷால் - லட்சுமி மேனன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருதரப்பிலும் இதுபற்றிய விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.
விஷாலுடன், இன்னொரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக முடிவானது. நிச்சயதார்த்தம் வரை சென்ற இந்த திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதனை விஷால் தரப்பினர் மறுத்துள்ளனர். இது உண்மையற்ற தகவல் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். இதனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
'நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததற்கு பின்னர் தான் தனது திருமணம் நடைபெறும்', என்று விஷால் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.