கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்


கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
x

'வா வாத்தியார்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தின் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 27-ந் தேதி வெளியானது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.

இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'வா வாத்தியார்' எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story