கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி உள்ளது "பிரபலங்கள் கருத்து"


கமல்ஹாசனின் விக்ரம்  படம் எப்படி உள்ளது பிரபலங்கள் கருத்து
x

கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி மூவருமே நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு உள்ளனர்.

சென்னை

உலகம் முழுவதும் இன்று விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் 4 வருடங்களுக்கு பிறகு பெரிய திரையில் வந்து உள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ், சிறப்பு தோற்றமாக சூர்யா என ஏகப்பட்ட வாவ் விஷயங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்தன.

திட்டமிட்டப்படி விக்ரம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட், உலக நாயகன் சம்பவம் பண்ணி இருக்காரு, லோகேஷ் ஃபேன் பாய் மொமண்ட் என ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதை பார்க்க முடிகிறது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். இதற்கான காரணத்தையும், குற்றவாளிகளையும் கண்டறிய, காவல் துறையினரால் பஹத் பாசில் தலைமையிலான ரகசிய குழு ஒன்று நியமிக்கப்படுகின்றது. இந்தக் குழு விசாரணையில் இறங்க, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளை கொன்றது யார்? அவர்கள் ஏன் கொல்லப்படுகின்றனர்? இதற்கான பின்புலம் என்ன? - இவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பஹத் பாசிலுடன் சேர்ந்து நமக்கும் விடையளிக்கும் படைப்புதான் 'விக்ரம்'.

கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி மூவருமே நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு உள்ளனர்.

படத்தின் முதல் பாதி முழுவதையும் பகத் ஆக்கிரமித்து உள்ளார். இரக்கமில்லாத துருவித் துருவி விசாரிக்கும் ஏஜெண்டாக மிரட்டுகிறார்.

முதல் பாதியை பஹத் பாசிலிடம் ஒப்படைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் லோகேஷ்.

அதுபோல் காளிதாஸ் ஜெயராமன், செம்பன் வினோத், நரேன், ரமேஷ் திலக், காயத்ரி ஷங்கர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சூர்யா.

1986-ம் ஆண்டு வெளியான கமலின் முந்தைய 'விக்ரம்' படத்துடன் தொடர்புபடுத்திய விதம் கவனிக்கவைக்கிறது.

ரசிகர்கள் மட்டுமில்லை சினிமா பிரபலங்களும் இன்று விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். படத்தை பார்த்த உடனே தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் விக்ரம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளனர்.

நடிகர் சாந்தனு விக்ரம் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லை கமல்ஹாசனை 'மான்ஸ்ட'ர் என புகந்துள்ளார். லோகேஷ் கனகராஜின் ரைட்டப்பையும் பாராட்டி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.


விக்ரம் படக்குழுவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி கமல்ஹாசன், லோகேஷ், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் அனைவரையும் டுவிட்டரில் டேக் செய்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.


4 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்ப்பது மிகுந்த சந்தோஷம் என கூறி தனது வாழ்த்துக்களை படகுழுவுக்கு தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.




Next Story