பி.டி.மாஸ்டராக கலக்கும் ஹிப்ஹாப் ஆதி - 'பி.டி.சார்' சினிமா விமர்சனம்


Hip Hop Adhi as PT Master - PT sir Movie Review
x

image courtecy:twitter@VelsFilmIntl

பி.டி.மாஸ்டராக வரும் ஹப் ஹாப் ஆதி, தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை காஷ்மீரா பர்தேஷியை காதலிக்கிறார்.

சென்னை,

பள்ளியில் பி.டி.மாஸ்டராக இருக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் முடியும் வரை கண்டம் இருப்பதாக ஜோசியர் கூற எந்தவித பிரச்சினைகளிலும் தன் மகன் சிக்கிவிடாதபடி கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அவருடைய அம்மா.

ஹிப்ஹாப் ஆதிக்கு தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை காஷ்மீரா பர்தேஷி மீது காதல் மலர்கிறது. பின்னர் இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள்.

அப்போது, ஆதி வீட்டுக்கு எதிரே வசிக்கும் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்கிறார். மாணவியின் மரணத்துக்கு கல்லூரி தாளாளர்தான் காரணம் என்று ஆத்திரம் அடைகிறார் ஆதி.

இதனால் ஆதியின் உயிருக்கு ஆபத்து வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாணவிக்கு நீதி வாங்கி தர கோர்ட்டு படி ஏறுகிறார். மாணவிக்கு நீதி கிடைத்ததா? மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் என்ன? என்பது மீதி கதை.

பி.டி.மாஸ்டராக வரும் ஹப் ஹாப் ஆதி, பி.டி.வகுப்பின் பெருமையை முகம் மலர பேசுவது, காஷ்மீரா பர்தேஷியுடனான காதல், கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலில் சிக்கும்போது பொங்கி எழுவது என்று ஹிப்ஹாப் ஆதி யதார்த்தமாக நடித்துள்ளார்.

கதாநாயகி காஷ்மீரா பர்தேஷி ஆப்பிள்போல் அழகாகவும், ஆதியை அநியாயத்தை எதிர்த்து தட்டிகேட்க சொல்வதும் நிறைவு. தன்னுடைய சுயரூபம் தெரிந்ததும் வில்லன் தியாகராஜன் பதுங்கி பாயும் புலியாக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.

பாலியல் சீண்டல்களால் பெண்களுக்கு நேரும் மன அழுத்தத்தை இன்னும் வலுவாக சொல்லி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் மாதேஷ் காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் இனிமை. பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் கவுரவம் கருதி அப்படியே விட்டுவிடாமல் குற்றவாளியை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்று அறிவுரையாக சொல்லி இருப்பது சிறப்பு.


Next Story