'கோட்' டிரைலர் அப்டேட் இன்று வெளியாகிறது


கோட்  டிரைலர் அப்டேட் இன்று வெளியாகிறது
x

'கோட்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 'கோட் 'படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் நேற்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால டிரைலர் தொடர்பான அப்டேட் வெளியாகவில்லை. தொடர்ந்து டிரைலர் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி 'கோட்' டிரைலர் வெளியாக உள்ள தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story