'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
x

'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் டிரெண்டாகி வருகிறது.


Next Story