லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட வேண்டும் - தமிழக அரசு
லியோ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது,
படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு 6 நாட்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரவு காட்சிகளை 1.30 மணிக்கு முடிக்க வேண்டும். தினமும் அதிகபட்சமாக 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 19 ந்தேதி முதல் 6 நாட்களுக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்தும் வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிறப்பு காட்சிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.