தனது பெயரில் இணையதளத்தில் போலி பதிவுகள் - 'லவ் டுடே' இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்


தனது பெயரில் இணையதளத்தில் போலி பதிவுகள் - லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2022 6:18 PM IST (Updated: 17 Nov 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

தனது பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக அவர் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' திரைப்படம் கடந்த 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனது பெயரில் இணையதளத்தில் போலி பதிவுகள் பகிரப்படுவதாக பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவுகளை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது தனக்கு கோபம் இல்லை என்றும், மாறாக மக்கள் தன்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டியதற்கு நன்றி எனவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார்.




Next Story