'அனைவரது வீட்டிலும் பூஜை அறை உள்ளது ஆனாலும்.. ' - இயக்குனர் மாரி செல்வராஜ்


Every house has a pooja room but.. - Director Mari Selvaraj
x

ஓ.டி.டி. வருகையால், திரையரங்கிற்கு வரும் மக்களின் மனநிலை மாறாது என்று மாரி செல்வராஜ் கூறினார்.


தூத்துக்குடி,

சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த இயக்குனர் மாரி செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது 'பைசன்' என்ற பெயரில் விளையாட்டை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறேன். இதில் உள்ள கதைக்களம் உண்மை சம்பவம் மற்றும் சில சம்பவங்களை வைத்து படமாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும். தற்போது அனைவரது வீட்டிலும் பூஜை அறை உள்ளது. எனினும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதைதான் விரும்புகிறோம். அதேபோன்று அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில்தான். எனவே ஓ.டி.டி. வருகையால், திரையரங்கிற்கு வரும் மக்களின் மனநிலை மாறாது.

தென்மாவட்டங்களில் உளவியல் ரீதியாக அனைவரின் மனதிலும் சாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. சாதி வன்மத்தை போக்க எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும், புரிதலுக்கு உள்ளாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story