சினிமா பற்றிய பகத் பாசிலின் அறிவுரை குறித்து பேசிய பிருத்விராஜ்
உங்கள் வாழ்க்கையில் சினிமாவுக்கு எவ்வளவு இடத்தை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும் என்று பிருத்விராஜ் கூறினார்.
சென்னை,
பிரபல நடிகர் பிருத்விராஜ். தற்போது இவர் நடித்துள்ள படத்தின் புரோமோசன்பணியில் ஈடுபட்டிருந்தபோது நடிகர் பிருத்திவிராஜிடம் , 'வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயம் கிடையாது' என்ற பகத் பாசிலின் அறிவுரை குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு அவர்,
நாம் அனைவரும் சினிமா விரும்பிகள். அதிலேயே வாழ்கிறோம். அதையே சுவாசிக்கிறோம் மற்றும் சினிமாவிலேயே உறங்குகிறோம். நாம் ஒருவரிடம் பேசும்போது கூட சினிமா வசனங்களை குறிப்பிடுகிறோம். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். பகத் பாசிலின் கருத்துக்கு பின்னால் அர்த்தம் உள்ளது. ஒரு நடிகராக சினிமாதான் என் வாழ்க்கை. அது எனக்கு நிறைய கொடுத்துள்ளது. ஆனால், இது என் வாழ்க்கை முழுவதும் இருக்குமா?
நாளையே சினிமா இல்லாமல் போகலாம். அப்படி போய்விட்டால் அது இந்த உலகத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படுத்திவிடாது. சினிமாவுக்கு நிச்சயமாக செல்வாக்கு உள்ளது, ஆனால் உங்கள் வாழ்க்கையில் சினிமாவுக்கான இடத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நிச்சயமாக, எனக்கு உட்பட பலரின் வாழ்க்கையில் சினிமா மிகப்பெரிய பொழுதுபோக்காக உள்ளது, அதற்கு நன்றி. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் மற்றும் இடத்தை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தாங்களாகவே தீர்மானிக்க முடியும். இவ்வாறு கூறினார்.