விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்றவரை தள்ளி விட்ட சிரஞ்சீவி


விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்றவரை தள்ளி விட்ட சிரஞ்சீவி
x

விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்றவரை நடிகர் சிரஞ்சீவி தள்ளி விட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. 1970-களில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நாயகனாகவே நடித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா இருவரும் ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் விமான நிலைய லிப்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரது, ரசிகர்களில் ஒருவர் சிரஞ்சீவியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.ஆனால், செல்பி எடுக்க முயன்றவரை அவர் தள்ளி விட்டார். பின்னர், எதுவும் நடக்காதது போல அங்கிருந்து சென்று விட்டார்.

நாகார்ஜுனா, தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சிரஞ்சீவியின் இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. நடிகர் சிரஞ்சீவியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story